லண்டன் பஸ்களில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவது தடை லண்டன் பஸ்களில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவது தடை

பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயக்கப்படும் பஸ்களில், நேற்று முதல், பணம் கொடுத்து டிக்கெட் வாங்குவது முழுமையாக தடை செய்யப்பட்டு, ‘ஆய்ஸ்டர் கார்டு’ எனப்படும், கார்டு மூலம் தான் பயணத்திற்கான கட்டணத்தை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுரங்க ரயில் கட்டணம், படகு கட்டணம், பஸ் கட்டணம் என, அனைத்து விதமான பயண கட்டணங்களுக்கும் செல்லுபடியாகும், ஆய்ஸ்டர் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.பத்தாண்டுகளுக்கு முன், 25 சதவீதம் பேர் மட்டுமே அத்தகைய கார்டுகளை பயன்படுத்திய நிலையில், இப்போது, 99 சதவீதம் பேர் அந்த கார்டுகளை பயன்படுத்தியே தங்கள் பயணங்களை மேற்கொள்கின்றனர்.

லண்டன் பஸ்களில் நேற்று முதல், 100 சதவீத கார்டு கட்டண முறை அமலுக்கு வந்தது. பஸ்களில் பயணிக்கும் போது, அதில் உள்ள கார்டு ரீடரில், கார்டை தேய்த்து விட்டு ஏற வேண்டும்; பஸ் கட்டணம், அந்த அட்டையில் உள்ள பணத்திலிருந்து வரவு வைக்கப்படும். மொபைல் போன் பிரீபெய்டு கட்டணம் போல், இந்த அட்டையில் பணத்தை அவ்வப்போது, ‘டாப் அப்’ செய்து கொள்ளலாம்.

 

Click Here

 

ஆசிரியர்