உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மன் வீரர் க்ளோஸ் புதிய உலக சாதனையை படைத்தார். பிரேசிலின் முன்னாள் வீரர் ரொனால்டோவி்ன் உலக சாதனையான 16 கோல்களை காட்டிலும் அதிக கோல்களை க்ளோஸ் அடித்துள்ளார். இவர் நான்காவது முறையாக உலக கோப்பை போட்டியில் விளையாடிவருகிறார் என்பது குறி்பிடத்தக்கது.
போட்டியின் 23வது நிமிடத்தில் கோல் அடித்த ஜெர்மனியின் குளோஸ், உலக கோப்பை தொடரில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். கடந்த 2002 உலக கோப்பை தொடர் முதல் இவர் இதுவரை23 போட்டியில் பங்கேற்று 16 கோல்கள் அடித்துள்ளார்.
