கர்ப்பக் கால தாய்-சேய் இறப்பு இந்தியாவில்தான் அதிகம்: ஐ.நா அறிக்கை கர்ப்பக் கால தாய்-சேய் இறப்பு இந்தியாவில்தான் அதிகம்: ஐ.நா அறிக்கை

வறுமை ஒழிப்பு, கர்ப்ப கால தாய்- சேய் இறப்பு சதவீதம் போன்றவற்றை கட்டுப்படுத்த இந்தியா போராடி வந்தாலும் இந்த பிரச்சனைகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கை, இந்தியாவில் அதிகமாக உள்ளது என்று ஐ.நா. தனது அறிக்கையில் கூறி உள்ளது.

‘மிலேனியம் அபிவிருத்தி இலக்கு 2014’ (Millennium Development Goals 2014) என்ற அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் ஐ.நா பொது செயலாளர் பான் கீ மூன் வெளியிட்டார்.

அதில், “இந்த ஆண்டு, அனைவருக்கும் சுத்தமான குடிநீர், குடிசைப்பகுதிகளில் வாழ்வோருக்கு சுகாதார திட்டங்கள், ஆரம்ப கல்வியில் பாலின வேறுபாடு இல்லாமை ஆகிய இலக்குகளை எட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

2015- ஆம் ஆண்டில், இதனைத் தாண்டி இன்னும் நிறைய கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டால், உலகில் மலேரியா, காச நோய், எச்.ஐ.வி ஆகிய நோய்களால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறையும்.

தெற்கு ஆசிய நாடுகளில், மிகவும் வலிமை வாய்ந்த அளவில் குழந்தை இறப்பு குறைந்துள்ளது. இந்த பகுதிகளில், 2013- ஆம் ஆண்டில் 1,00,000 குழந்தைகள் உயிருடன் பிறந்தால், அதே காலக்கட்டத்தில் பிறப்பின்போது குழந்தை இறக்கும் எண்ணிக்கை 230 ஆக இருந்தது. இவை வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது 14 முறை பெரியதாக உள்ளது.

2012- ஆம் ஆண்டு, உலக அளவில் குழந்தை இறப்பு சதவீதத்தில் இந்தியா முதலாவது இடத்தில் இருந்ததது. அங்கு 14 லட்சம் குழந்தைகள், தங்கள் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு முன்னரே இறந்துபோயினர்.

உலகில் கர்ப்பக் காலங்களில் பெண்கள் இறப்பு சதவீதம், மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் தான் அதிகமாக உள்ளது. உலகின் கர்ப்பக் கால பிறக்கும் குழந்தை இறப்பு மூன்றில் ஒரு பங்கு இந்தியா மற்றும் நைஜீரியாவில் தான் ஏற்படுகிறது.

இவை இந்தியாவில் மொத்தம் 17 சதவீதமாகவும், நைஜீரியாவில் 16 சதவீதமாக உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

ஆசிரியர்