மகாத்மா காந்தி சிலை பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில்

பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தியின் சிலையை நிறுவும் அந்நாட்டு அரசின் முடிவுக்கு, பிரிட்டன் நீதித்துறை அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சைலேஷ் வாரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற வளாகத்தில் காந்தியின் சிலையை நிறுவுவது, அவருக்கு உரித்தான மரியாதையாகும்’ என்று சைலேஷ் வாரா தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் ஹேக் மற்றும் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் காந்தியின் சிலை நிறுவப்பட உள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தனர்

ஆசிரியர்