ஹாலிவுட் படத்தில் நடித்த யானை தந்தத்துக்காக கொலைஹாலிவுட் படத்தில் நடித்த யானை தந்தத்துக்காக கொலை

பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த யானையை அதன் தந்தத்துக்காக விஷம் வைத்து மர்ம நபர்கள் கொன்றனர்.

“அலெக்ஸாண்டர் தி கிரேட்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த கலோ என்ற யானை (வயது 50), தாய்லாந்தின் அயுத்தயா மாகாணத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. 4.9 டன் எடையுடைய அந்த யானைக்கு விஷம் கொடுத்து கொன்று அதன் தந்தத்தை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றவிட்டதாக பாங்காக் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து அந்த யானையின் பாகன் பான் சலாங்கம் கூறுகையில், “”ஆற்றின் கரையோரம் ஒரு மரத்தில் யானையை சங்கிலியால் வியாழக்கிழமை மாலையில் கட்டிப்போட்டு விட்டு சென்றிருந்தேன். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது, யானை இறந்து கிடந்தது. வீரியமுள்ள விஷத்தைக் கொடுத்து யானை கொல்லப்பட்டுள்ளது. யானையின் தந்தத்தை மர்ம நபர்கள் பாதியாக வெட்டி எடுத்துள்ளனர்” என்றார்.

ஆசிரியர்