4.8 மில்லியன் டாலரை குழந்தைத் திருமணங்களைத் தடுக்க அமெரிக்கா ஒதுக்கியுள்ளது 4.8 மில்லியன் டாலரை குழந்தைத் திருமணங்களைத் தடுக்க அமெரிக்கா ஒதுக்கியுள்ளது

இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 4.8 மில்லியன் டாலரை அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்தியா தவிர நேபாளம், வங்கதேசம், புர்கினா ஃபாúஸா, எத்தியோப்பியா, தான்ஸானியா மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து வாஷிங்டனில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவன (யுஎஸ்ஏஐடி) நிர்வாகி ராஜ் ஷா கூறுகையில், “குழந்தைத் திருமணத்துக்கு எதிரான போராட்டம் என்பது வறுமைக்கு எதிரான போராட்டமாகும்.

இரண்டு தலைமுறைகளாக நிலவும் வறுமையை முடிவுக்கு கொண்டுவர அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். அதைச் செயல்படுத்தும் விதமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிதியானது பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது’ என்றார்.

இந்தியாவில் குழந்தைத் திருமணங்களை தடுப்பதற்காக, 1994ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தைகளுக்கு நிபந்தனைக்கு உள்பட்ட பணச் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் படி, 18 வயதுக்கு மேல் மட்டுமே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும், இல்லையென்றால் அரசால் வழங்கப்படும் நிதி திரும்பப் பெறப்படும்.

ஆசிரியர்