December 7, 2023 4:35 am

தூக்கு தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட சூடான் பெண் இத்தாலி பயணம்தூக்கு தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட சூடான் பெண் இத்தாலி பயணம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அரேபியக் குடியரசுகளில் ஒன்றாக அறியப்படும் சூடானில் தீவிர இஸ்லாமியக் கோட்பாடுகளே பின்பற்றப்பட்டு வருகின்றன. மத மாற்றம், மதத் துவேஷம் போன்ற செயல்கள் அங்கு மரண தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுகின்றன. இங்கு கடந்த மே மாதம் மரியம் யஹியா இப்ராஹீம்(27) என்ற பெண் இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியதாகவும், தெற்கு சூடானைச் சேர்ந்த அமெரிக்கக் கிறிஸ்தவர் ஒருவரை மணம் புரிந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு தூக்கு தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டது. சூடானிலிருந்து வெளியேறுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. அப்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அவர் தனது இரண்டாவது குழந்தையை சிறையிலேயே பிரசவித்தார்.

இவரது மரண தண்டனைத் தீர்ப்பு உலகம் முழுவதும் எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. இவரை விடுவித்ததற்கான காரணம் எதுவும் வெளியிடப்படாத நிலையில் இன்று தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் மரியம் இத்தாலிய அரசு விமானம் ஒன்றில் ரோமிற்கு சென்றார்.

இத்தாலியின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் லபோ பிஸ்டெல்லி அவருடன் விமானத்தில் உடன் சென்றார். ரோமில் உள்ள சியாம்பினோ விமான நிலையத்தில் மரியம் குடும்பத்தினர் இறங்கியபோது அந்நாட்டுப் பிரதமர் மட்டெயோ ரென்சி அவர்களை வரவேற்றார். மரியத்தின் தண்டனை தொடர்பாக சூடான் அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக பிஸ்டெல்லி அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இணையதளத்தில் அவர் வெளியிட்டிருந்த புகைப்படத்தில் தங்களது திட்டம் நிறைவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்