வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீ வடக்கு கலிபோர்னியாவில்வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீ வடக்கு கலிபோர்னியாவில்

வடக்கு கலிபோர்னியாவில் சியரா நெவரா அடிவாரத்தில் உள்ள திராட்சை தோட்டத்தில் தீ பற்றிக்கொண்டது. இதனால் அங்குள்ள 5 வீடுகள் எரிந்து சாம்பலானதாகவும், சுமார் 1,300 ஏக்கர் தீயில் கருகியது எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கென எல் டொராடோ பகுதியில் பிரத்யேக மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 250 குடும்பங்களில் இருந்து சுமார் 750 மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டரில் இருந்து நீருற்றி தீயை அணைக்கும் முயற்சியில் அந்நாட்டு தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது 20 சதவிகித தீ மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வறண்ட காற்று வீசுவதால் தீ மேலும் பரவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர்