பிரிட்டிஷ் மருத்துவ மாணவர்கள் மலேசியாவில் கொலை பிரிட்டிஷ் மருத்துவ மாணவர்கள் மலேசியாவில் கொலை

மலேசியாவில் இரண்டு பிரிட்டிஷ் மருத்துவ மாணவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மலேசிய டி.ஐ.ஜி. மொகமது பக்ரி மொகமது ஜின் கூறுகையில், ‘‘இறந்த இரண்டு மாணவர்களுக்கும் 22 முதல் 23 வயது இருக்கும். இவர்களுக்கும் உள்ளூரைச் சேர்ந்த 4 பேருக்கும் இடையே நடைபெற்ற தகராறில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

இது தொடர்பாக 31 வயதுடைய ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து இருக்கிறோம். குசிங்கில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தகராறில் இவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.

இச்சம்பத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. கொலை செய்யப்பட்ட இரண்டு பேரும், மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இந்த மாத இறுதியில் பிரிட்டன் திரும்ப நினைத்ததாக கூறப்படுகிறது.

ஆசிரியர்