இலங்கைக்கு, ஐ.நா., அகதிகள் அமைப்பு கடும் கண்டனம் இலங்கைக்கு, ஐ.நா., அகதிகள் அமைப்பு கடும் கண்டனம்

பாகிஸ்தானில் இருந்து தப்பி, இலங்கையில் அடைக்கலம் புகுந்து உள்ள, பாகிஸ்தான் சிறுபான்மை இன மக்களை, மீண்டும் பாகிஸ்தானிடமே ஒப்படைத்த இலங்கைக்கு, ஐ.நா., அகதிகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், முஸ்லிம்களுக்கு மட்டும் தான் அனைத்து சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படுகின்றன. ஷியா, அகமதி பிரிவு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மை இனத்தவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாக்கப்படுகின்றனர். அடக்குமுறைக்கு அஞ்சியும், சுதந்திர மான மத நடவடிக்கைகளுக்காகவும், ஏராளமான அகமதி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்கள், 1,500 பேர், தங்கள் சொந்தபந்தங்கள் வசிக்கும் இலங்கை யின் தெற்கு பகுதிக்கு கடல் வழியாக வந்துள்ளனர். அவர்களை பிடித்து, மீண்டும் பாகிஸ்தான் வசம் ஒப்படைக்க, இலங்கை முடிவு செய்தது. அதை அறிந்த, ஐ.நா., அகதிகள் அமைப்பு கண்டித்தது. அவ்வாறு செய்வதால், அந்த அப்பாவிகள் தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம் என கண்டித்தது. எனினும், அதைப்பற்றி கவலைப்படாமல், இந்த மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் சிறுபான்மையினர், பாகிஸ்தானுக்கு, இலங்கையால் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதற்கு, ஐ.நா., அகதிகள் அமைப்பு நேற்று கடும் கண்டனம் தெரிவித்தது.

ஆசிரியர்