பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகருக்கு விபரீத ஆசைபாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகருக்கு விபரீத ஆசை

பிரேசில் நாட்டில் மைக்கேல் ஜாக்சினின் தீவிர ரசிகர் ஒருவர் அவரைப்போலவே தோற்றம் வேண்டும் என்பதற்காக ஆசிட் ஊசிபோட்டுக்கொன்று தினமுன் நடனபயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

 அண்டோனியா கிளய்ட்சன் ரோட்ரிக்ஸ் (வயது 32)  என்பவர் ம,றைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர் ஆவார் அவருக்கு ஒரு விபரீத ஆசை. மைக்கேல் ஜாக்சன் போல் உருவத்தை அடைய வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதற்கு மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்ற ரோட்ரிக்ஸ், ஜாக்சனின் நிறத்தை பெறுவதற்காக ஆசிட்டை ஊசி மூலம் தனது உடலில் செலுத்தி  முகம் உள்பட உடல் முழுவதையும் வெளுக்க செய்துள்ளார்.  பின்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மொத்தம் நான்கு முறை தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு மைக்கேல் ஜாக்சனின் தோற்றத்தை பெறுவதல் வெற்றி கண்டுள்ளார். உருவத்தில் அச்சு அசலாக மைக்கேல் ஜாக்சன் போல உள்ள ரோட்ரிக்ஸ் இதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்தள்ளாராம்.

 மைக்கேல் ஜாக்சனின் தோற்றத்தை பெறுவதற்காக அவர் பயன்படுத்தியய ஹையலூரோனிக் அமிலம் மற்றும் போடோக்ஸ் ஊசி ஆகியவை பக்கவிளைவுகள் இல்லாதவை என்பதால் அவருடைய உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ரோட்ரிக்ஸ் மைக்கேல் ஜாக்சன் போல ஆட வேண்டும் என்பதற்காக தினமும் நான்கு மணிநேரம் நடனப்பயிற்சி மேற்கொள்கிறார்.

ஆசிரியர்