சப்பாத்திக்கு ஒரு ரோபோ சப்பாத்திக்கு ஒரு ரோபோ

சிங்கப்பூரைச் சேர்ந்த இந்திய தம்பதி, சப்பாத்தி செய்து தரும் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோ இன்னும் விற்பனைக்கு வராத நிலையில், அமெரிக்காவில் இதற்கு பயங்கர வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ரிஷி இஸ்ரானி- பிரனோதி என்ற தம்பதியினர் சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்றனர். இந்திய சமையலறைக்கு ஏற்புடையதாக ஒரு உபகரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்பது இவர்களின் கனவு. கடந்த 6 வருடங்களாக முயற்சி செய்து ‘ரோடிமேடிக்’ என்ற சப்பாத்தி செய்யும் ரோபோ ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

சப்பாத்தியின் சுற்றளவு, தடிமம், மென்மை என அனைத்தையும் இந்த ரோபோவில் உள்ளிட்டு செய்துவிடலாம்.

இந்த ரோபோவை வடிவமைக்க இவர்கள் 6 வருடங்கள் உழைத்துள்ளனர். இவர்களது கண்டுபிடிப்புக்கு அமெரிக்க சான்று வழங்கப்பட்டுள்ளதால், இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவில் இந்த சப்பாத்தி செய்யும் ரோபோ விற்பனைக்கு வந்துவிடும்.

ஆசிரியர்