இதில் ஜே .வி.பி.எம்.பி.யான நளிந்த ஜெயதிஸ்ஸ 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் ,அந்த விஜயங்களின் நோக்கங்கள்.அதில் பங்கேற்றவர்கள்  அதற்காக செலவிடப்பட்ட தொகை தொடர்பில் பிரதமரும் தேசிய கொள்கைகள்,பொருளாதார அலுவல்கள்,மீள்குடியேற்றம்,புனர்வாழ்வு வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர்கள் அலுவல்கள் அமைச்சரான  ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பினார்.

ஆனால் பிரதமர் சபையில் இருக்காததால் அரசதரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க .இக்கேள்விக்கு பதிலளிக்க பிரதமர் 6 மாத கால அவகாசம் கோருவதாகக் கூறினார்.

இதனைத்தொடர்ந்து ஒழுங்குப்பிரச்சினை எழுப்பிய ஜே .வி.பி.எம்.பி.யான நளிந்த ஜெயதிஸ்ஸ ,பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதிலளிக்க 3 தடவைகளுக்கு மேல் கால அவகாசம்  கேட்க முடியாது.  ஆனால் இக்கேள்விக்கு பதிலளிக்க முதல்தடவை 3 மாத கால அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர் இரண்டாவது தடவையும் 3 மாத கால அவகாசம் கேட்கப்பட்டது. இப்போது மூன்றாவது தடவை 6 மாத கால அவகாசம் கேட்கப்படுகின்றது.

ஒட்டு மொத்தத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஜனாதிபதி மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் ,அந்த விஜயங்களின் நோக்கங்கள் தொடர்பில் பதிலளிக்க அரசு ஒருவருட கால அவகாசம் கேட்டுள்ளது.

இது மிகவும் சாதாரண கேள்வி. இதற்கு பதிலளிக்க ஏன் இவ்வளவு கால அவகாசம் எனக்கேட்டார்.