செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புலிகள் தொடர்பான தமிழர்களின் கைது சரிதான்: மலேசிய பிரதமர்

புலிகள் தொடர்பான தமிழர்களின் கைது சரிதான்: மலேசிய பிரதமர்

0 minutes read

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் மலேசியாவில் கைதான 12 பேரும் பொலிஸாரின் நியாயமான காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் மஹதீர் மொஹமட் (Mahathir Bin Mohamad) தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்ததாக தெரிவித்து, அவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு மலேசியாவில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை கைது செய்யப்பட்டவர்களது தொலைபேசி, அவர்கள் தங்கியிருந்த இடம் என்பவற்றை மலேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதன்போது தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய தகவல்களுடன், சுவரொட்டிகள், அச்சுப்படங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பாக எமது பொலிஸார் விளக்கமளித்துள்ளனர். அவை ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களே” என அந்த நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.