செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா டுவிட்டர் லோகோவில் மாற்றம் – குருவிக்கு பதில் நாய்..!

டுவிட்டர் லோகோவில் மாற்றம் – குருவிக்கு பதில் நாய்..!

1 minutes read

டுவிட்டர் லோகோவை அதன் நிறுவனர் எலான் மஸ்க் மாற்றம் செய்துள்ளமை பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு ஒக்டோபரில் 44 பில்லியன் டொலருக்கு டுவிட்டரை வாங்கினார். அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

முதலில் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளுக்கு ப்ளூ டிக் இருந்து வந்த நிலையில், அதில் பல்வேறு நிறங்களை மாற்றி அமைத்தார்.

அதன்படி தனிநபர் அதிகாரப்பூர்வ கணக்குக்கு நீல நிறமும், வணிக கணக்குகளுக்கு தங்க நிறமும், அரசு சார்ந்த கணக்குகளுக்கு க்ரே நிறமும் என டிக்குகள் மாற்றப்பட்டது.

இதன் பின்னர் சந்தா செலுத்தி பல்வேறு வசதிகள் மற்றும் அம்சங்களுடன் கூடிய டுவிட்டர் ப்ளூ சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தற்போது ட்விட்டர் செயலியின் லோகோ மாற்றப்பட்டுள்ளது. ட்விட்டரின் அடையாளமாக கருதப்படும் நீல பறவை மாற்றப்பட்டு அதற்கு பதிலாக ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது.

Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது.

டுவிட்டர் செயலியின் லோகோ மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயனாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.