June 4, 2023 10:35 pm

மெக்சிகோவில் பணிபுரிய மத்திய அமெரிக்கர்களுக்கு வாய்ப்பு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
மெக்சிகோவில் பணிபுரிய மத்திய அமெரிக்கர்களுக்கு வாய்ப்பு

மெக்சிகோவில் பணிபுரிவதற்காக மத்திய அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா வழங்கவுள்ளதாக மெக்சிகோ ஜனாதபதி ஆண்ட்ரெஸ் மானுவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெக்சிகோவில் உள்ள ரயில் பாதை போன்ற பெரியளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு கூடுதல் மனிதவளம் தேவைப்படுகிறது. எனவே, மெக்சிகோவில் பணிபுரிவதற்காக மத்திய அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்படவுள்ளது. இதன்மூலம், மத்திய அமெரிக்கர்கள் மெக்சிகோவில் சட்டப்பூர்வமாக தங்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நாட்டில் உள்ள பல மாகாணங்கள் தங்களது குடியேற்றக் கொள்கைகளை கடுமையாக்கி வருகிறன. இதனால் மத்திய அமெரிக்காவில் இருந்து வேலைக்காக அமெரிக்கா செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

ஏனெனில், மத்திய அமெரிக்காவில் வசிப்பவர்கள் அமெரிக்காவுக்கு செல்ல வேண்டுமானால், மெக்சிகோ நாட்டை கடக்க வேண்டும். அது அவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த நிலையிலேயே, மத்திய அமெரிக்கர்களுக்கான மேற்படி மகிழ்ச்சிகரமான அறிவிப்பை மெக்சிகோ ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்