செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா மாயமான நீர்மூழ்கி கப்பலில் இருந்த ஐந்து பேரும் இறந்தனர்

மாயமான நீர்மூழ்கி கப்பலில் இருந்த ஐந்து பேரும் இறந்தனர்

1 minutes read

நூற்றாண்டு பழமையான டைட்டானிக் கப்பலுக்கு ஐந்து பேரை ஏற்றிச் சென்ற ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வியாழனன்று தெரிவித்துள்ளது.

அட்லாண்டிக் கடலில் மூழ்கிய நிலையில் தேடப்பட்டுவந்த டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கரையோர படையினரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் அருகே காணாமல் போன நீர்மூழ்கி கப்பலின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பாகங்கள் சுமார் 1600 அடி ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

குறித்த விபத்தின் மூலம் நீர்மூழ்கி கப்பல் வெடித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்நிலையிலே நீர்மூழ்கி கப்பலில் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எனினும், குறித்த ஐவரது உடல்களையும் மீட்க முடியும் என தற்போதைக்கு கூற முடியாதுள்ளதாக அமெரிக்க கரையோர பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.