செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ஐ.பி.எல். ரி-20 தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டம்!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டம்!

0 minutes read

நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். ரி-20 தொடரின் எஞ்சியப் போட்டிகள், எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கொவிட் -19 காரணமாக ஒத்திவைக்கப்பட வேண்டிய 14ஆவது அத்தியாயம், செப்டம்பர் 16-20 திகதிகளில் மறுதொடக்கம் செய்யப்பட்டு ஒக்டோபர் 9-10 திகதிகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்வரும் மே 29ஆம் திகதி நடைபெறவுள்ள சிறப்பு பொதுக் கூட்டத்தின் (எஸ்ஜிஎம்) பின்னர் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

நடப்பு தொடர், 29 போட்டிகள் முடிந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்டது. இன்னும் 31 போட்டிகள் நடத்தப்பட வேண்டி உள்ளது.

எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளை ரி-20 உலகக்கிண்ண தொடருக்கு முன்பு நடத்திட வேண்டும் என்பதில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தீவிரமாக உள்ளது. ரி-20 உலகக்கிண்ண தொடர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.