செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

1 minutes read

கூட்டு வரவேற்பு நாடான கனடாவுக்கு எதிராக டொரன்டோ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பி குழுவுக்கான பீபா உலகக் கிண்ணப் போட்டியை 1 – 1 என்ற கோல்கள் கணக்கில் பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இப் போட்டி முடிவை அடுத்து இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப் பெற்றுக்கொண்டன.

ஆரம்பம் முதல் கடைசிவரை விறுவிறுப்பை ஏற்படுத்திய இந்தப் போட்டியின் 21ஆவது நிமிடத்தில் ஜோவோ லூக்கிக் கோல் போட்டு பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினாவை முன்னிலையில் இட்டார்.

இதனைத் தொடர்ந்து வரவேற்பு நாடான கனடா தனது சொந்த ரசிகர்கள் முன்னிலையில் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டது.

போட்டியின் 77ஆவது நிமிடம் வரை பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா முன்னிலையில் இருந்தது.

போட்டியின் 78ஆவது நிமிடத்தில் கய்ல் லெரின் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தி கனடா அணிக்கும் ரசிகர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுத்தார்.

அதன் பின்னர் இரண்டு அணிகளும் வெற்றி கோலை போடுவதற்கு கடுமையாக முயற்சித்தன. ஆனால் அந்த முயற்சிகள் கைகூடாமல் போக போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.