Tuesday, January 18, 2022

இதையும் படிங்க

வடமாகாண கராத்தே சம்மேளனத்தின் வர்ணஇரவு விருதுவிழா – 2022

வடமாகாண கராத்தே தோ சம்மேளனத்தினால் தேசிய போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான விருது வழங்கல் விழா நேற்று யாழ் பொதுநூலக மண்டபத்தில் நடைபெற்றது.

தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டு ஆவணம் இந்தியத் தூதுவரிடம் கையளிப்பு!

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் கையளிக்கப்பட்டது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த இந்தியா...

மட்டு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் ஆசிரிய மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் கல்வி பயின்றுவரும்  இரண்டாம் ஆண்டு ஆசிரிய மாணவர்கள் 202 பேருக்கு இன்று செவ்வாய்க்கிழமை (18) மேற்கொண்ட அன்டிஜன்...

ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுடைய நலனுக்கு தமது ஒத்துழைப்பை தொடர்ந்தும் வழங்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

கோட்டாபயவின் கொள்கை விளக்க உரை மிக மோசமானது என்கிறார் சுமந்திரன்

தமது அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆற்றிய உரை, ”மிக மோசமான உரை” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் நெல் சந்தைப்படுத்தலை மாவட்டத்திற்குள் மட்டுப்படுத்தக்கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணி கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சிவில்...

ஆசிரியர்

மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி

பெண்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மருத்துவக் கல்வி பயில்வது சாதாரணமானது அல்ல. பெண்கள், படிப்பதற்கான உரிமை கூட மறுக்கப்பட்ட காலம் அது. பெண்கள் போராடித்தான் வாக்குரிமையைப் பெற்றனர். கல்வி கற்பதற்கான உரிமை, எட்டுமணி நேரம் வேலை செய்வதற்கான உரிமை முதலிய அடிப்படை உரிமைகள் கூட அவர்களுக்கு இயல்பாகவும், எளிதாகவும் கிடைக்கவில்லை.

மருத்துவப் படிப்பிலும், ஆராய்ச்சியிலும் ஆண்களின் ஆதிக்கம் நிலவிய அக்காலத்தில், பெண்களும் மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டு உலகின் மிக உயாந்த நோபல் பரிசைப் பெற முடியும் என்பதைச் சாதித்துக் காட்டிய பெண்மணி, ‘ஜெர்டி திரேசா கோரி’. அதுமட்டுமல்ல, மருத்துவ ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி அவர் என்பது உலகம் வியக்கும் உண்மையானது.

‘ஜெர்டி திரேசா கோரி’-1896-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் அமெரிக்காவில் உள்ள பெரகு என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தனது தொடக்கக் கல்வியை வீட்டிலேயே பயின்றார். பின்னர் 1906-ஆம் ஆண்டு லைசியம் பெண்கள் பள்ளியில் சேர்ந்து படித்தார். பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு எழுதித் தேர்ச்சியடைந்தார். உடற்பயிற்சிப் படிப்பிலும் சேர்ந்து 1914-ஆம் ஆண்டு வென்றார்.

மருத்துவத்தை ‘பெரகு’ விலுள்ள ஜெர்மன் பல்கலைக் கழகத்தில் கற்றார்!, 1920 ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்றார்.

கார்ல் பெர்டினண்ட் கோரி என்பவரை 1920-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரும் ஜெர்டி திரேசா கோரியுடன் சேர்ந்து மருத்துவம் பயின்று டாக்டர் பட்டம் பெற்றவர்.

‘ஜெர்டி திரேசா கோரி’ -1920 முதல் 1922 வரை ‘கரோலினின்’ குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். பின்னர் அமெரிக்கா சென்று நியூயார்க் நகரத்தில் தமது கணவர் பணிபுரிந்த ஆய்வு மையத்தில் சேர்ந்தார். இருவரும் 1922 முதல் 1931 வரை இதே ஆய்வு மையத்தில் பணிபுரிந்தனர். கணவர் 1931 ஆம் ஆண்டு ஜெயிண்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் மருந்தியல் துறைப் பேராசிரியராகப் போனார். அவரைத் தொடர்ந்து ஜெர்டி திரேசா கோரியும் அப்பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராகச் சேர்ந்தார்.

கணவனும், மனைவியும் இணைந்து மிருகங்களின் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரை பற்றியும், இன்சுலின் செயல்பாட்டைப் பற்றியும் ஆய்வு செய்தனர். மிருகங்களில் கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றம் எப்படி நடக்கிறது என்பதையும், அதற்கென்று தனியான திசுக்கள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பவற்றையும் ஆய்வு செய்தனர். திசுக்கள் எப்படியெல்லாம் ‘என்ஸைமை’ உற்பத்தி செய்து, தனியாகப் பிரிக்கின்றன என்பதையும், அப்படி பிரியும்போது சில படிகத்தன்மை கொண்டதாக அவை உள்ளனவா என்பதையும் கண்டறிந்தனர்.

இவர்கள் 1936-ஆம் ஆண்டு தனியாக குளுக்கோஸ்-ஐ, பாஸ்பேட்டைப் பிரித்தனர், ‘பாஸ்பேட்’ ஒரு தனிப்பட்ட கார்பன் மூலம் குளுக்கோஸ் மூலக்கூறில் கலந்துள்ளது என்பதையும், இது கிரியா ஊக்கியாக செயல்படுகிறது என்பதையும் கண்டு, இதற்கு ‘கோரி ஈஸ்டர்’ என்று பெயரிட்டு அழைத்தனர்.

குளுக்கோஸானது மிருக உடலில் சேமித்து வைக்கும், ‘கார்போ ஹைடிரேட் கிளைகோஜன்’ ஆகும். இது மிருகங்களில் கல்லீரலில் காணப்படுகிறது. இது செயல்புரிந்து, பல மாற்றம் ஏற்பட்டு மீண்டும் கடைசியாக இரத்த குளுக்கோஸிலிருந்து கிளைகோஜனாக மாறுகிறது. ஆறாண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து என்ஸைமை தனியாகப் பிரித்தனர். இதில் கோரி ஈஸ்டரானது கிரியா ஊக்கியாக இருந்து செயல்பட்டது. செயற்கை முறையில் கிளைக்கோஜனை 1943ஆம் ஆண்டு உருவாக்கிக் காட்டினர். மேலும் குழாயில் ஒன்றுடன் ஒன்றாக மாற அனுமதித்தனர். இதற்கு ‘கோரி சுழற்சி’ (Cori Cycle) எனப் பெயரிட்டனர்.

எளிய சர்க்கரை குளுக்கோஸிலிருந்து பாஸ்பேட்டைக் கண்டுபிடித்தனர். இது உலக முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பாகும். கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றத்தை உலகம் முழுமைக்கும் அறிவித்தனர்.

விலங்களின் என்ஸைமானது மாவுப் பொருளாகி எப்படி ரத்த சர்க்கரையாய் மாறுகிறது என்று கண்டுபிடித்தற்காக, இவர்களுக்கு 1947-ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சர்க்கரை வியாதி எப்படி உண்டாகிறது என்பதை அறிந்து கொள்ளவும், அதைக் கட்டுப்படுத்த மேற்கொண்டு ஆய்வு செய்யவும் இது உதவிகரமாக உள்ளது.

‘ஜெர்டி திரேசா கோரி’ 1947-ஆம் ஆண்டு உயிர் வேதியியல் துறையில் பேராசிரியரானார். கல்லூரியில் மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்து உயிர் வேதியியல் பாடத்தைக் கற்பித்தார். ‘The Journal of Biological Chemistry’ உட்பட பல அறிவியல் இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.

இவரும், இவரது கணவர் பெர்டினண்ட் கோரியும் அமெரிக்காவின் உயிரியல் வேதியியலாளர் கழகம், தேசிய அறிவியல் கழகம், மருந்தியல் கழகம், மனோதத்துவக் கழகம் முதலிய பல அமைப்புகளில் உறுப்பினர்களாகச் சேர்ந்து பணியாற்றினார்.

அமெரிக்க வேதியியல் கழகத்தின் விருதையும், 1946-ஆம் ஆண்டு ஸ்கியூபி விருதையும் பெற்றனர். மேலும் ‘ஜெர்டி திரேசா கோரி’க்கு 1948-ஆம் ஆண்டு கார்வான் பதக்கமும் (Garvan Medal) செயின்ட் லூயிஸ் விருதும் (St. Louis Award) கிடைத்தது. பின்னர் 1950-ஆம் ஆண்டு சர்க்கரை ஆராய்ச்சி விருது வழங்கப்பட்டது.

பாஸ்டன் பல்கலைக் கழகம், ஸ்மித் கல்லூரி, யேல் பல்கலைக் கழகம், கொலம்பியா பல்கலைக் கழகம், ரோச்செஸ்டர் கல்லூரி முதலிய பல கல்லூரிகள் ஜெர்டி கோரிக்கு டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

‘டாக்டர் ஜெர்டி கோரி’ 1967-ஆம் ஆண்டு அக்டோபர் 26-ஆம் நாள் இயற்கை எய்தினார். அமெரிக்காவின் அஞ்சல்துறை 2008-ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி ஜெர்டி கோரியின் பணியைச் சிறப்பிக்கும் வகையில் தபால் தலை வெளியிட்டது!. மருத்துவத்திற்காகவும், உள இயல் ஆராய்ச்சிக்காகவம் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி இவரே !.

– பி.தயாளன்

நன்றி : கீற்று இணையம்

இதையும் படிங்க

ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்!

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. விசாரணைகளை விரைந்து முடித்து குற்றவாளிகளை சட்டத்தின்...

மோடியின் உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உயிரிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்படும்!

இலங்கையினால் செலுத்தப்பட வேண்டியிருந்த 500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு...

அபுதாபி தாக்குதலின் பின் சவுதி தலைமையிலான கூட்டுப்படை யேமனில் வான் வழித்தாக்குதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹவுதி கிளர்ச்சிக் குழு ஒரு கொடிய தாக்குதலை முன்னெடுத்த ஒரு நாள் கழித்து, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி யேமன் தலைநகரான சனாவில் வான்வழித் தாக்குதல்களை...

யாழ்.நாவற்குழி பகுதியில் கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது!

இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றிருக்கின்றது, ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 76...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

குறை நிறை வாழ்க்கை | ஒரு பக்க கதை | காரை ஆடலரசன்

வெளியே சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்து அமர்ந்திருந்த கணவனைப் பார்த்த வைதேகிக்கு அதிர்ச்சி.! எந்த நேரம் வெளியே சென்று...

அன்றாடன் | கவிதை | ஆமிராபாலன்

சிறு அகலின் சுடர் தாங்கும் நேசத்தின் நினைவெனகனவின் தலைகீழ் உலகில்தலை இல்லா மனிதனாகஇத்தனை பெரிய உலகையும் அணைத்துக் கொண்டு நடந்து போகும்குருவியின் கால்கள் கொண்ட ஒருவனாகஉன்னால் இன்னும் எத்தனை தூரம்...

மேலும் பதிவுகள்

பிந்திய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும்!

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. விசாரணைகளை விரைந்து முடித்து குற்றவாளிகளை சட்டத்தின்...

மோடியின் உயிருக்கு ஆபத்து : பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

குடியரசு தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உயிரிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...

500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்படும்!

இலங்கையினால் செலுத்தப்பட வேண்டியிருந்த 500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு...

அபுதாபி தாக்குதலின் பின் சவுதி தலைமையிலான கூட்டுப்படை யேமனில் வான் வழித்தாக்குதல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹவுதி கிளர்ச்சிக் குழு ஒரு கொடிய தாக்குதலை முன்னெடுத்த ஒரு நாள் கழித்து, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி யேமன் தலைநகரான சனாவில் வான்வழித் தாக்குதல்களை...

யாழ்.நாவற்குழி பகுதியில் கப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது!

இந்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றிருக்கின்றது, ஏ-9 வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 2 இலட்சத்து 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 76...

துயர் பகிர்வு