தனது அனைத்து Boeing 787 ரக விமானங்களிலும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களின் சோதனையை முழுமையாக முடித்துவிட்டதாக தெரிவித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், அங்கு எந்தக் குறைபாடும் தென்படவில்லை என்றும் கூறியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அந்தச் சோதனையை மேற்கொள்ள இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.
எரிபொருள் சுவிட்ச்களில் கோளாறு ஏற்பட்டதாக விபத்துக் குறித்த முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருந்தது.
தொடர்புடைய செய்தி : போயிங் ரக விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு!
விமானம் புறப்பட்டுச் சிறிது நேரத்திற்குள் எரிபொருள் சுவிட்ச்கள் மூடப்பட்டிருப்பதாக விமானத்தின் பதிவுப் பெட்டியிலிருந்து பெறப்பட்ட தகவல்களில் தெரியவந்தது.
அகமதாபாத்திலிருந்து இலண்டன் புறப்பட்ட அந்த விமானத்தில் பயணம் செய்த 241 பேரும், தரையில் இருந்த 19 பேரும் உயிரிழந்தனர்.
விமானத்தில் இருந்த ஒருவர் மாத்தியர் உயிர் தப்பினார்.
சுவிட்ச்களில் கோளாறு என்று தெரிந்ததும் ஏனைய விமான நிறுவனங்களும் Boeing 787 விமானங்களில் சோதனை நடத்தின.
இதுவரை எந்தக் கோளாறு குறித்தும் தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.