மலேசியா – பாஹாங் மாநிலத்தின் குவாந்தானிலுள்ள இராணுவ விமான நிலையத்தில் நேற்றிரவு (21) 9 மணியளவில் விமானம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து விமானப்படை அவசர நடவடிக்கை எடுத்ததாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணத்தைப் பற்றி யாரும் ஊகிக்கவேண்டாம் என்றும் விமானப்படை கேட்டுக்கொண்டது.
விவரங்கள் தெரிந்தவுடன் தகவல் வெளியிட இருப்பதாகவும் அது தெரிவித்தது.
விமானியும் விமானத்திலிருந்த ஆயுதக் கட்டமைப்பு அதிகாரியும் பத்திரமாக விமானத்திலிருந்து வெளியேறினர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பாஹாங் மாநில பொலிஸ் தலைவர் கூறியிருக்கிறார்.
விபத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது. அதில் விமானப்படை விமானம் புறப்பட்ட உடனே தீப்பற்றி எரிவது தெரிகிறது.