செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் அணுசக்தி தளத்திற்கு வெளியே போராடியவர்கள் மீது வாகனம் மோதல்; ஒருவர் படுகாயம்

அணுசக்தி தளத்திற்கு வெளியே போராடியவர்கள் மீது வாகனம் மோதல்; ஒருவர் படுகாயம்

0 minutes read

செல்லாஃபீல்ட் அணுசக்தி தளத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குழு மீது வாகனம் மோதியதில் ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம், நேற்றுப் புதன்கிழமை காலை 9 மணியளவில், தளத்தின் வாயில்களில் ஒன்றின் அருகே நடந்துள்ளது.

சம்பவத்தில் 55 வயதான ஒரு நபர் வெஸ்ட் கம்பர்லேண்ட் மருத்துவமனையில் தீவிர காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். 39 வயதான மற்றொரு நபரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரது காயங்கள் தீவிரமானவை அல்ல.

இந்த சம்பவத்திற்காக உள்ளூர் பகுதியைச் சேர்ந்த 16 முதல் 52 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் அபாயகரமான வாகனம் ஓட்டியது மற்றும் வேண்டுமென்றே கடுமையான உடல் காயத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்ட பொலிஸார், “பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை” என்று தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.