செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு கைகொடுக்கும் இங்கிலாந்து; அவசர மனிதாபிமான நிதியுதவி

இலங்கைக்கு கைகொடுக்கும் இங்கிலாந்து; அவசர மனிதாபிமான நிதியுதவி

0 minutes read

‘திட்வாஹ்’ சூறாவளியால் ஏற்பட்ட பரவலான சேதத்திலிருந்து இலங்கை மீண்டு வரும் நிலையில், இங்கிலாந்து அவசர மனிதாபிமான நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, சுமார் $890,000 (சுமார் £675,000) மதிப்பிலான உதவித்தொகையை இலங்கைக்காக ஒதுக்க இங்கிலாந்து அரசு உறுதியளித்துள்ளது.

இந்த உதவி, செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உள்ளூர் கூட்டாளிகளுடன் இணைந்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் அவசரப் பொருட்கள், பாதுகாப்பான தங்குமிடம், உணவு மற்றும் மருத்துவ உதவி போன்ற அத்தியாவசிய தேவைகளை உடனடியாக வழங்குவது இந்தத் தொகையின் பிரதான நோக்கமாகும்.

சூறாவளியால் இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், இது ஒரு முக்கியமான சர்வதேச ஆதரவாக இருப்பதாக இங்கிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More