பல ஆண்டுகளாக நீடித்து வரும் அரசியல் பதற்றத்திற்கிடையில் தாய்லாந்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் மில்லியன் கணக்கான மக்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பொதுத் தேர்தலை பிரதமர் அனுடின் சான்-ஓ-சா அறிவித்திருந்தார். இருப்பினும், அவரது பூமிபோல் அதுல்யாதேஜ் கட்சியோ அல்லது வாக்கெடுப்புகளில் முன்னிலை வகித்து வரும் மக்கள் கட்சியோ நாடாளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மையைப் பெறும் வாய்ப்பு குறைவாக இருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 500 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பட்ட பெரும்பான்மை கிடைக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய அரசியல் நிலைமையிலான உறுதியற்ற சூழ்நிலையை முடிவுக்கு கொண்டுவரும் முக்கியமான தேர்தலாக இது கருதப்படுகிறது.