மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள அவசர சூழ்நிலையால் வெளியேற முடியாமல் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு உதவ முன்வந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் ( United Arab Emirates) அறிவித்துள்ளது.
சுமார் 20,200 பயணிகள் தற்போது நாட்டை விட்டு புறப்பட முடியாமல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களின் தங்குமிட மற்றும் உணவுச் செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்காக டுபாய் நகரில் உள்ள சில விடுதிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் தற்காலிக தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான மெத்தைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தினமும் மூன்று வேளை உணவும் வழங்கப்படுகிறது.
மேலும், பயணிகளை பாதுகாப்பாக தங்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக விமான நிலையங்களும் தேசிய விமான சேவை நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுகின்றன. தேவையெனில் மாற்று விமானங்களிலும் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.