செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்புக்கு பிரான்ஸ்–இங்கிலாந்து முனைப்பு: சர்வதேச பணிக்குழு அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்புக்கு பிரான்ஸ்–இங்கிலாந்து முனைப்பு: சர்வதேச பணிக்குழு அறிவிப்பு

1 minutes read

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற கடற்பயணம் தொடர்வதை உறுதிப்படுத்தும் சர்வதேச பணிக்குழுவை வழிநடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.

உலக நாடுகள் இணைந்து உருவாக்கப்படும் இந்தக் குழு, பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே செயல்படும் என்றும், எந்தவொரு தாக்குதல் நோக்கத்திற்கும் பயன்படாது என்றும் இரு நாடுகளும் வலியுறுத்தின.

வட்டாரத்தில் நிலவும் பதற்றம் குறைந்து, அமைதி ஒப்பந்தம் உறுதியாகும் போது இந்தப் பணிக்குழு தனது செயல்பாடுகளைத் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தகப் போக்குவரத்து தடையின்றி நடைபெறுவதற்காக கடலில் பதிக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கும் இந்தக் குழு ஆதரவு வழங்கும் என்று இங்கிலாந்து கியர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக ஏற்கெனவே சுமார் 10 நாடுகள் பங்களிக்க முன்வந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட இணையவழி சந்திப்பில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 30 தலைவர்கள் கலந்துகொண்டதாகவும், ஆனால் அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகள் இதில் பங்கேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.