செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் லூட்டன் கத்திக்குத்து: 17 வயது சிறுவன் கொலை – 16 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு!

லூட்டன் கத்திக்குத்து: 17 வயது சிறுவன் கொலை – 16 வயது சிறுவன் மீது குற்றச்சாட்டு!

1 minutes read

லூட்டனில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, 16 வயது சிறுவன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 18:30 மணியளவில், லூட்டனில் உள்ள கிங்ஸ்வே பொழுதுபோக்கு மைதானத்தில் (Kingsway Recreation Ground) வன்முறை மோதல் நடப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு இளைஞர்கள் பலர் பெரிய கத்திகளை ஏந்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த மோதலில் பலமுறை கத்தியால் குத்தப்பட்ட 17 வயது சிறுவன், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவன், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 16 வயது சிறுவன் தற்போது பொலிஸ் வைக்கப்பட்டுள்ளான்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு சிறுவர்கள் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் ஒருவன் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

ஏனைய மூன்று 17 வயது சிறுவர்கள் வன்முறை மற்றும் ஆயுதம் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது இது தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு
புலனாய்வு அதிகாரி நிக் கார்ட்னர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இச்சம்பவம் தொடர்பான வீடியோக்களையோ அல்லது புகைப்படங்களையோ சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம் என்று பொலிஸ் மற்றும் லூட்டன் நகர சபை உறுப்பினர் ஜானிப் ராஜா ஆகியோர், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

“பாதுகாப்பாக இருக்க வேண்டிய பூங்காவில் இத்தகைய துயரமான சம்பவம் நடந்தது லூட்டன் மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது” என்று ஜானிப் ராஜா தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.