செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா லாலிபாப் கொடுக்கும் முயற்சியால் கல்வியமைச்சர் பதவி நீக்கம்……

லாலிபாப் கொடுக்கும் முயற்சியால் கல்வியமைச்சர் பதவி நீக்கம்……

0 minutes read

கொரோனா தொடர்பான கசப்பான சம்பவங்களை மறக்க மாணவர்களுக்கு லாலி பாப் வாங்கித்தர திட்டமிட்ட மடகாஸ்கர் அமைச்சர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். ஆப்பிரிக்க நாடுகளில் வைரஸ் தொற்று கடுமையாக உயர்ந்து வருகிறது.

இதற்காக இப்பகுதிகளில் கோவிட் ஆர்கானிக்ஸ் என்ற மூலிகை மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மடகாஸ்கர் நாட்டு கல்வித்துறை அமைச்சராக இருக்கும் ரிஜாசோவா ஆண்ட்ரியமனனா என்பவர், பள்ளியில் மாணவர்கள் சாப்பிடும் கொரோன மருந்தின் கசப்பான தன்மையையும், அது குறித்த சம்பவங்களையும் மறக்க அவர்களுக்கு லாலிபாப் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதற்காக இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கு அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா கடும் எதிர்ப்புத் தெரிவித்து ரிஜாசோவோவை பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.