May 28, 2023 5:40 pm

60 ஆண்டுகளில் முதல் முறையாக லோகோவை மாற்றிய நோக்கியா!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சுமார் 60 ஆண்டுகளில் நோக்கியா நிறுவனம் முதன்முறையாக தனது லோகோவை புதிய வடிவில் மாற்றி (26 ) அறிவித்துள்ளது.

ஆரம்ப காலத்திலிருந்து நோக்கியா அலைபேசி மிகவும் பிரபலம். அதன் தனித்துவமான அடையாளமாக விளங்குவது அதன் லோகோவாகும்.

அலைபேசியை ஆன் செய்யும் போது இருவர் கைகளை இணைக்கும் வகையிலான வடிவமைப்பினை யாராலும் எளிதாக மறந்து விட முடியாது.

இந்த நிலையில், அடுத்தக் கட்ட வளர்ச்சி மற்றும் புதிய திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில், நோக்கியா நிறுவனம் தனது லோகோவை ‘NOKIA’ என்கிற வார்த்தையை குறிக்கும் வகையில் 5 வெவ்வேறு வடிவங்களைக் கொண்டு உருவாக்கியுள்ளது.

அத்துடன், அதன் பிரத்யேக நீல நிறத்தையும் மாற்றியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட தலைமை நிர்வாக அதிகாரி பெக்கா லண்ட்மார்க், நோக்கியா தற்போது ஒரு வணிக தொழில்நுட்ப நிறுவனமாக செயல்படுவதாக தெரிவித்தார்.

ரீசெட், அக்ஸலரேட் மற்றும் ஸ்கெல் ஆகிய மூன்று தந்திரங்களை பெக்கா லண்ட்மார்க் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதில் ரீசெட் நிலை முடிவடைந்துவிட்ட நிலையில், இரண்டாம் நிலையை தொடங்கப்போவதாக பெக்கா கூறினார்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உபகரணங்களை விற்பனை செய்யும் நோக்கியா தற்போது தனது வணிகத்தை வளர்ச்சி பாதையில் முன்னேற்றி கொண்டுப்போவதில் கவனம் செலுத்தி வருகிறது.

கடந்தாண்டு நிறுவனம் 21% வளர்ச்சி பெற்றது. தற்போது 8% அல்லது 2 பில்லியன் யூரோக்கள் (2.11 பில்லியன்) டாலர் விற்பனையில் உள்ளது. இதை இரு மடங்காக்க கவனம் செலுத்துகிறோம் என்று லண்ட்மார்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்