ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரஞ்சித்சியாலம்பிட்டிய தாங்கள் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவையே ஆதரிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

கோத்தாபய ராஜபக்சவே பொருத்தமான வேட்பாளர் என்பதால் இந்த முடிவை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் நேற்றிரவு இடம்பெறவிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கட்சியின் மத்திய குழு பொதுஜனபெரமுனவின் வேட்பாளரிற்கு ஆதரவளிக்கவேண்டும் என முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் என குறிப்பிட்டார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் நான்கு தெரிவுகளே உள்ளன, நடுநிலை வகிப்பது,சொந்தவேட்பாளரை களமிறக்குவது, ஐக்கியதேசிய கட்சி அல்லது பொதுஜனபெரமுனவிற்கு ஆதரவளிப்பது ஆகியனவையே அவை என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எங்கள் சிறந்த வேட்பாளர் ஜனாதிபதியே எனினும் அவர் போட்டியிட விரும்பவில்லை மேலும் சுதந்திரகட்சியால் வெல்ல முடியாது என்பதும் வெளிப்படை என  முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டால் அது முற்போக்கு எண்ணம் கொண்ட வாக்காளர்களின் ஆதரவை பிரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் சுதந்திரக்கட்சி எந்த சூழ்நிலையிலும் ஐக்கியதேசிய கட்சி வேட்பாளரை ஆதரிக்கமுடியாது எங்களிற்கு பல கசப்பான அனுபவங்கள் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

எங்களிற்கு உள்ள இறுதி தெரிவையே நாங்கள் தெரிவு செய்கின்றோம், ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை ஆதரிப்பதே அது எனவும் முன்னாள் அமைச்சர்  ரஞ்சித்சியாலம்பிட்டிய தெரிவித்தார் என டெய்லி மிரர் குறிப்பிட்டுள்ளது.

மைத்திரி – மஹிந்த இடையில் விசேட சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இன்று(சனிக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இதன்போது புதிய தேர்தல் கூட்டணி, ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து தொடர்ச்சியாக இழுபறி நிலை காணப்படுகின்றது. இந்தநிலையில் இன்று இடம்பெறவுள்ள குறித்த விசேட சந்திப்பில் இதுகுறித்து இணக்கப்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.