
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடலுக்கு நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வென்னப்புவ கம்மலவெல பகுதில் உள்ள கடலுக்கு சென்று நீராடிய போதே இச் சம்பவம் நடை பெற்றுள்ளது .
மேலும் இது தொடர்பில் தெரிய வருவது. இவர்கள் 17 தொடக்கம் 21 வயது மட்டங்களை சார்ந்த மூன்று இளைஞர்கள் ஆவர் .
சம்பவம் குறித்து குடும்பத்தார் மிகவும் கவலை அடைந்துள்ளதுடன் குறித்த இளைஞர்களின் சடலங்களை மீட்கும் பணியில் கடற்படையினரும், பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர் .சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.