செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் ஹெரோயினுடன் பெண்களுட்பட நால்வர் கைது!!

யாழில் ஹெரோயினுடன் பெண்களுட்பட நால்வர் கைது!!

0 minutes read

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட ஹெரோயின்பொருளுடன்  2 பெண்கள், 2 ஆண்கள் என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

தெல்லிப்பளை, வித்தகபுரம் பகுதியில் குறித்த நான்கு பேரும் இன்று செவ்வாய்க் கிழமை மாலை கைது செய்யப்பட்டனர்அத்துடன் சந்தேகநபர்களிடமிருந்து 5 கிராம் 6 மில்லிகிராம் அளவுடைய ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி சுமார் 3 லட்சம் ரூபாயாகும்.மேலும் சுமார் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மண்ணுக்குள் போட்டு கலந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் வித்தகபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணும் 31 வயதுடைய பெண்ணும் கொழும்பு, மோதரையிலிருந்து வருகை தந்திருந்த 31 வயதுடைய முஸ்லிம் ஆணும் 25 வயதுடைய முஸ்லிம் பெண்ணும் அடங்குகின்றனர்.

சந்தேகநபர்கள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.