வேட்புமனு கையளிக்க மட்டுப்படுத்தபட்டுள்ள பிரதிநிதிகள் .

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு கையளிப்பதற்காக, மண்டபத்திற்கு வருகைதரும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தபட்டுள்ளது.இதற்கமைய 3 பிரதிநிதிகள் மாத்திரமே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தவிர, வேட்புமனுவை கையளிக்கும் நபருடன் மேலுமொருவர் மாத்திரம் மண்டபத்திற்கு வருகை தருவதும் சிறந்ததாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று, நாளை மற்றும் நாளை மறுதினமும் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.இதேவேளை, 3 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையினால், பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை கையளிக்கும் நடவடிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணிகளுக்காக மாவட்ட தேர்தல் அலுவலகம், பிரதேச செயலகம் ஆகிய திறக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.இன்றும் நாளையும் மற்றும் நாளை மறுதினம் 12 மணிவரை வேட்பு மனுக்களை தாக்கல் ​செய்ய முடியும்என ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.

ஆசிரியர்