180 கடற்படைச் சிப்பாய்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் 180 கடற்படைச் சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதியும் கோரோனா கட்டுப்பாட்டு செயலணியின் தலைவருமான லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றுபவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வெலிசறை கடற்படை முகாமில் கடமையின் போது 112 கட்ற்படையினருக்கும் விடுப்பில் உள்ள 68 கடற்படையினரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் இராணுவத் தளபதி கூறினார்.

இதேவேளை, இன்று திங்கட்கிழமை அழையாளம் காணப்பட்ட 44 பேரும் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர்