செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 103ஆக அதிகரிப்பு!

வவுனியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 103ஆக அதிகரிப்பு!

0 minutes read

வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 24 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியுடன் தொடர்புடைய 49 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதனையடுத்து, வவுனியா நகர கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 103ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு கடந்த 8ஆம் திகதி கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.