செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஹற்றனில் கொரோனா சிகிச்சை நிலைய கட்டடம் திறப்பு!

ஹற்றனில் கொரோனா சிகிச்சை நிலைய கட்டடம் திறப்பு!

0 minutes read

ஹற்றன்- டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலைய கட்டடமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதாவது, 8 மில்லியன் ரூபாய் செலவில், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு, சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மற்றும் ஏ.எச்.எஸ் தனியார் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த கட்டடத்தை அமைத்துள்ளன.

குறித்த கட்டட தொகுதியில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான ஓய்வறைகள், நோயார்களுக்கான உணவு விடுதி, 28 கட்டில்கள் உள்ளன

டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையிலுள்ள கொரோனா தொற்றார் சிகிச்சை வார்ட்டில், இட நெருக்கடி காரணமாக வைத்தியசாலை நிர்வாகத்தினரால் முன்வைத்த வேண்டுகோளுக்கிணங்க, ஏ.எச்.எஸ் தனியார் நிறுவனம், 80 இலட்சம் ருபாய் செலவில் இந்த சிகிச்சை நிலைய புதிய கட்டடத்தை அமைத்து, கையளித்துள்ளது.

இந்த நிகழ்வில் ஏ.எச்.எஸ் தனியார் நிறுவனம் மற்றும் டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.