செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வரவு செலவுத் திட்டத்தின் இன்றைய விவாதத்தில் பஙகேற்குமா எதிர்க்கட்சி?

வரவு செலவுத் திட்டத்தின் இன்றைய விவாதத்தில் பஙகேற்குமா எதிர்க்கட்சி?

0 minutes read

வரவு செலவுத் திட்டத்தின் இன்றைய குழுநிலை விவாதத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பாக கட்சி தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் தீர்மானிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முற்பகல் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களுக்கிடையிலான கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை சபாநாயகர் உறுதிப்படுத்த தவறும் பட்சத்தில் தொடர்ந்தும் சபை அமர்வுகளை புறக்கணிக்கவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை தாக்க முயற்சித்ததாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

இதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக உறுதியளிக்கப்படும் வரை சபை அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.