செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சட்டவிரோத முதலீடு வழக்கு டிசம்பர் 8 மீள விசாரணை

சட்டவிரோத முதலீடு வழக்கு டிசம்பர் 8 மீள விசாரணை

0 minutes read

முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்துக் கொண்டு சட்டவிரோதமாக 15 மில்லியன் ரூபாவை சம்பாதித்து அதனை முதலீடு செய்ததான குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை டிசம்பர் 8 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் நேற்று (04) விசாரணைக்கு வந்தது.

இதன்போது, இது தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

நீதிமன்றில், இந்த முறைப்பாடு தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.