செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை!

தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை!

1 minutes read

தந்தையும் மகனும் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவம் அநுராதபுரம் மாவட்டம், கெக்கிராவை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மகளின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த தந்தையும், மகனுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-

கெக்கிராவை பிரதேசத்தில் இவ்வருடம் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவி ஒருவர், அப்பிரதேசத்திலுள்ள ஓட்டோ சாரதியான இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இதற்குக் குறித்த மாணவியின் தந்தையும், சகோதரரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (25) மாலை தனது காதலியின் வீட்டுக்கு ஓட்டோவில் சென்ற காதலன், காதலியை வலுக்கட்டாயமாகத் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதன்போது காதலன் மீது காதலியின் தந்தையும், சகோதரரும் கொட்டன்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த காதலன், தனது ஓட்டோவில் மறைத்து வைத்திருந்த வாளால் காதலியின் தந்தைதையும், சகோதரரையும் சராமரியாக வெட்டி விட்டு அங்கிருந்து ஓட்டோவில் தப்பியோடியுள்ளார்.

53 வயதுடைய காதலியின் தந்தை நேற்று (25) மாலை சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். 25 வயதுடைய காதலியின் சகோதரர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று (26) மாலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய இளைஞரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.