யாழ்ப்பாணத்தில் காணாமல்போன வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடுவில் பகுதியிலுள்ள காணியொன்றில் இருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உடுவில், மல்வம் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செல்வராசா (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி வீட்டிலிருந்து இந்த வயோதிபர் வெளியே சென்ற நிலையில், காணாமல்போனார் என்று அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வயோதிபர் சடலமாக நேற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.