செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா போர் வெடிக்கும்; அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!

போர் வெடிக்கும்; அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!

1 minutes read

தங்களது ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டால் போர் வெடிக்கும் என அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியா தனது ஆயுத சோதனைகளுக்கு எதிரான எந்தவோர் அமெரிக்க இராணுவ நடவடிக்கையையும் போருக்கான அறிவிப்பாக பார்க்கும்.

“பசிபிக் பெருங்கடல் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு சொந்தமானது அல்ல. அமெரிக்கா மற்றும் தென்கொரியா தங்களது கூட்டுப் பயிற்சியை விரிவுப்படுத்த நினைத்தால், தென்கொரியாவுக்கு எதிராக விரைவான மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்க வடகொரியா தயாராக உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் கொரிய தீபகற்பத்தில் போர் விமானங்களை பறக்கவிட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றன.

இந்தக் கூட்டுப்போர் பயிற்சியின்போது, வடகொரியா பசிபிக் பெருங்கடலை நோக்கி ஏவுகணைகளை செலுத்தினால் அவற்றை அமெரிக்க இராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்தத் திட்டமிட்டுள்ளதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்தே, அமெரிக்காவுக்கு வட கொரியா போர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.