செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை!

1 minutes read

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் வடதமிழ்நாட்டை ஓட்டி ஆந்திர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

அதேபோல் மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். மேலும் இன்றும், நாளையும் கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகள், லட்சத்தீவு, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமாரியில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.