செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home விளையாட்டு ரி-10: வனிந்து ஹசரங்கவில் சுழலில் சிக்கியது சென்னை பிரேவ்ஸ்!

ரி-10: வனிந்து ஹசரங்கவில் சுழலில் சிக்கியது சென்னை பிரேவ்ஸ்!

1 minutes read

ரி-10 தொடரின் 18ஆவது லீக் போட்டியில், டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபியில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணியும் சென்னை பிரேவ்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை பிரேவ்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில், 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பானுக ராஜபக்ஷ 18 ஓட்டங்களையும் தசுன் சானக 8 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுகளையும் ராயீஸ் மற்றும் ரஸ்ஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சுல்தான் அஹமட் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 58 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி, ஆறு ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், டெக்கான் க்ளேடியேட்டர்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேவிட் வெய்ஸ் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களையும் டொம் பென்டோன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சென்னை பிரேவ்ஸ் அணியின் பந்துவீச்சில், அஞ்சலோ பெரேரா மற்றும் மார்க் டியால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 3 விக்கெட்டுகளை வீழ்த்திய வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.