செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயம்

யாழில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயம்

1 minutes read

யாழ்.நவாலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதையடுத்து தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டு கும்பலில் ஒருவரை வீட்டார் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

திருச்சபை வீதி நவாலி வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றினுள், இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை 3.20 மணியளவில் அத்துமீறி  நுழைந்த வாள்வெட்டு குழு ஒன்று, வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பட்டாரக வாகனத்தின் மீது பெற்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொருக்கி, வீட்டிலிருந்த இளைஞனின் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டவேளை இளைஞன் தப்பித்த நிலையில் குறித்த இளைஞனின் தந்தையான நடராசா அருள் றொபின்சன் (வயது 48) என்பவர் வாள் வெட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து அயலவரின் உதவியுடன் வாள்வெட்டு கும்பலில் ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரிடம் இருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபரை மானிப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேகநபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.