இத்தியானத்தை அமாவாசை அன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் செய்து தொடர்ந்து இதுபோல் பவுர்ணமி வரை காலை 4 முதல் 5 மணி வரை நெய் விளக்கு ஏற்றி கணபதி திருவுருவப்படம் முன் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.
ஒரு விரிப்பில் கிழக்கு நோக்கி பத்மாசனம், அல்லது வஜ்ராசனம், அல்லது சாதாரணமாக உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் முதுகெலும்பு நேராக இருக்கட்டும், கண்களை மூடிக் கொள்ளுங்கள். முதலில் தலை முதல் கால் வரை உடல் வெளித் தசையில் உங்கள் மனதை நிலை நிறுத்தி அதில் உள்ள டென்ஷன் உடலைவிட்டு வெளியேறுவதாக எண்ணி ஒரு 5 நிமிடம் தளர்த்தவும். பின் மெதுவாக இரு நாசி வழியாக மூச்சை உள் இழுத்து இரு நாசி வழியாக மூச்சை வெளிவிடவும்.
பின் உங்கள் மனதை உங்கள் உடலில் உள்ள முதுகுத்தண்டின் கடைசிபகுதி உள் பகுதியில் மனதை நிறுத்தவும். இது மூலாதாரச் சக்கர மாகும். இதில் உங்களுக்குப் பிடித்த கணபதி உருவத்தை தியானிக்கவும். அல்லது பத்து நிமிடம் மனதிற்குள் ஜெபிக்கவும்.
அப்பொழுது மலர்களினால் மானசீகமாக அர்ச்சனை செய்யவும். பின் மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிட்டு மூலாதாரச் சக்கரத்தில் கணபதியின் முழு அருளைப் பெறுவதாக தியானிக்கவும்.
பின் விநாயகா, நான் பல ஜென்மங்களில் செய்த தீவினைப் பதிவுகள் அங்கே உன்னிடத்தில் வாசனையாக உள்ளன. எல்லா தீவினைகளும் அழியட்டும். இந்த உடல்,உள்ளம், புனிதம் அடையட்டும். எண்ணம், சொல், செயல் மூன்றும் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வாழும் வாழ்க்கையை அருள்வாய் விநாயகா என்று பிரார்த்திக்கவும்.
பின் மெதுவாக ஓம் சாந்தி என்று மூன்று முறைகள் கூறி தியானத்தை நிறைவு செய்து கண்களைத் திறந்து கொள்ளவும். மிக அற்புத மகிமை வாய்ந்த இந்த மூலாதார கணபதி தியானத்தின் பலன்கள் அளவிடற்கரியது.
இத்தியானத்தால் நம் ஊழ்வினைகள் அறுக்கப்படுகின்றது. உடல் உள் உறுப்புக்கள் நல்ல வலுவாக இயங்குகின்றது. எப்பொழுதும் தெய்வ சிந்தனையில் வாழலாம்.
உடலில் உயிர்சக்தி மூலாதாரத்தில் இருந்து தான் உடல் முழுக்க இயங்குகின்றது. இந்த மூலாதாரம் பழுதடைந்தால் உடலில் உயிரோட்டம் ஒழுங்காக இயங்காது. உடல் சோர்வு, மன சோர்வு- ஏற்படும். இந்த அற்புத தியானத்தால் உயிரோட்டம் மிகச் சிறப்பாக இயங்குகின்றது. என்ன கிரக ஜாதகதோஷங்கள் இருந்தாலும் அவை கணபதி அருளால் விலகி நன்மைகள் நடக்கும்.
இத்தியானத்தை அமாவாசை அன்று அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள் செய்து தொடர்ந்து இதுபோல் பவுர்ணமி வரை காலை 4 முதல் 5 மணி வரை நெய் விளக்கு ஏற்றி கணபதி திருவுருவப்படம் முன் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.
நன்றி | மாலை மலர்