இந்தப் பயிற்சி செய்வதன் மூலம், பிட்டத் தசைகளுக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கும். அடிவயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக இயங்கும். சோம்பல் நீங்கும்.
உடலுக்கு சோர்வை ஏற்படுத்தாமல், வலிமையையும், நெகிழ்வுத் தன்மையையும் தருபவை யோகா பயிற்சிகள். வேலைகள் செய்வது, உட்காருவது, எழுவது என உடலின் பல இயக்கங்களுக்கு அடிப்படையாக இருக்கும் இடுப்பு எலும்புகள், கால் மூட்டுகள் மற்றும் பாதங்களுக்கு வலிமை சேர்ப்பதற்கு இந்தப் பயிற்சிகள் உதவும்.
புறாவைப் போன்ற தோற்றத்தில், ஒற்றை காலைக் கொண்டு செய்யும் வகையில் இந்த ஆசனம் இருப்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. இந்தப் பயிற்சியை செய்வதன் மூலம் தலைக்கும், காலுக்கும் இடைப்பட்ட உறுப்புக்கள் பலம் பெறுகின்றன.
முதலில் மண்டியிட்டு அமருங்கள். பின்னர் குழந்தை தவழ்வது போல கைகளை முன்னால் ஊன்றுங்கள். இந்த நிலையில் மெதுவாய் ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து வெளியிடுங்கள். இப்போது இடது காலை மடக்கி, வலது காலை பின்புறமாக நீட்டவும். பின்பு இரண்டு கைகளையும் தரையில் ஊன்றவும்.
பின்னர் படத்தில் காட்டியது போல் மெதுவாக வலது காலை மடக்கி, மேலே நோக்கி கொண்டு வரவும். கைகளால் வலது பாதத்தை பிடித்துக் கொள்ளுங்கள். இப்போது ஆழ்ந்து மூச்சை உள்
ளிழுத்து வெளியிடுங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். அதன் பிறகு இடது காலிலும் இதே போன்று செய்யவும்.
இந்தப் பயிற்சி செய்வதன் மூலம், பிட்டத் தசைகளுக்கு நெகிழ்வுத் தன்மை கிடைக்கும். அடிவயிற்றுப் பகுதியிலுள்ள உறுப்புகள் நன்றாக இயங்கும். சோம்பல் நீங்கும்.
நன்றி | மாலை மலர்