இந்த ஆசனம் செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் நெகிழ்ச்சியடையும். உடல்சோர்வு, முதுகுவலி மற்றும் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் சிரமங்கள் குறையும்.
செய்முறை
விரிப்பில் அமர்ந்து இடதுகாலை வலப்பக்கமாக மடக்கி, வலது காலை இடதுகாலிற்கு வெளிப்புறமாக தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு உடலின் மேல்பாகத்தை வலதுபக்கமாகத் திருப்ப வேண்டும். முதுகுத் தண்டு வடம் வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
வலதுகால் பாதத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு, வலது கையை பின்பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும். இயல்பாக மூச்சை உள்ளே இழுத்தவாறு, 20 முதல் 30 நொடிகள் இதே நிலையில் இருக்கலாம். பின்னர் மெதுவாக இயல்பு நிலைக்கு வந்து திரும்பவும். மறுபக்கம் இதேபோல செய்ய வேண்டும்.
இந்த ஆசனம் செய்வதால் இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் நெகிழ்ச்சியடையும். ரத்த ஓட்டம் சீராகும். மூளை நரம்புகளின் இறுக்கம் குறையும். கழுத்து, இடுப்பு மற்றும் தோள்பட்டை தசைகள் விரிவடையும். செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றி செரிமானத்தை தூண்டும். உடல்சோர்வு, முதுகுவலி மற்றும் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் சிரமங்கள் குறையும்.