உட்கார்ந்த நிலையில் மேற்கொள்ளும் இந்த ஆசனம், இனிமையான யோகா நிலையாகும். மனதை நிதானப்படுத்தவும், மனஅழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்கவும் உதவும்.
செய்முறை
யோகா விரிப்பில் மேல் இரு கால்களையும் மடித்தவாறு உட்காரவும். மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுத்தவாறு இரு உள்ளங்கைகளையும் ஒன்றாக இணைத்து கூப்பி மெதுவாக தலைக்கு மேல் உயர்த்தவும்.
கூப்பிய உள்ளங்கைகளை மீண்டும் மார்புக்கு அருகில் கொண்டு வரவும். பின்பு இடது கையை மட்டும் இடது காலிற்கு அருகில் வைத்து அழுத்தம் கொடுக்கவும். அதே வேளை வலது கையினை தலைக்கு மேல் உயர்த்தி இடது திசை நோக்கி உடலையும், வலது கையினையும் ஒரு சேர வளைக்கவும். இதே நிலையில் சில விநாடிகள் இருக்கவும்.
பின்பு மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பவும். பிறகு உங்களது வலது கையை தரையில் வைத்து கொண்டு இடது கைகை தலைக்கு மேல் உயர்த்தி வலது திசை நோக்கி உடலையும் இடது கையினையும் ஒரு சேர நீட்டவும்.
மீண்டும் உடலை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும். சம்மணமிட்டு உட்கார்ந்து இரு கைகளையும் மடியின் மீது வைத்து மெதுவாகவும் ஆழமாகவும் மூச்சை உள்ளே இழுத்து வெளி விடவும். இந்த சுவாச பயிற்சியை சில முறை செய்யவும்.
பலன்கள்
உட்கார்ந்த நிலையில் மேற்கொள்ளும் இந்த ஆசனம், இனிமையான யோகா நிலையாகும். மனதை நிதானப்படுத்தவும், மனஅழுத்தத்தையும் பதற்றத்தையும் போக்கவும் உதவும்.
தவிர்க்க வேண்டியவர்கள்
கழுத்து, முதுகு, இடுப்பு பகுதியில் காயங்கள் உள்ளர்கள், அறுவைசிகிச்சை மேற்கொண்டவர்கள் இந்த யோகாசனத்தை செய்யக்கூடாது.
நன்றி | மாலை மலர்