ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரையில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.
பின்னர் வேக வைத்த பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி போல் திரட்டி முக்கோண வடிவில் செய்து அதில் செய்து வைத்த சிக்கன் கலவையை போட்டு ஓரங்களில் தண்ணீர் தொட்டு நன்றாக மூடி விடவும். இவ்வாறு இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான சிக்கன் சமோசா ரெடி.
நன்றி | மாலை மலர்
வணக்கம் இலண்டன் WHATSAPP CHANNELநாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள வணக்கம் இலண்டன் WhatsApp Channelஇல் இணையுங்கள். JOIN NOW